சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்….

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் மன்னார் ,அநுராதபுரம் ,வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த பகுதிகளில் பலத்த காற்றும் விசக்கூடும் எளவும் குறிப்பிடப்பட்டுள்ளது